12/21/07

அண்ணா பல்கலைக்கழகமா - திரைப்பட நகரமா

.. என்று சந்தேகம் வரும் அளவு ஒரு காலத்தில் இருந்தது. நான் கல்லூரியில் இருந்தபோது ஒரு நாள் சன் தொலைக்காட்சியில் "ஒரு கைதியின் டைரி" படம் போட்டார்கள். கல்லூரி விடுதியில் உள்ள தொலைக்காட்சி அறையில் ஒரு பெரிய கூட்டமே கூடி பார்த்துக்கொண்டிருந்தது. திடீரென்று ஒரே விசில், கூச்சல். பார்த்தால் அண்ணா பல்கலைக்கழக Main buildingல் அடுத்த 10 நிமிடக் காட்சி எடுக்கப்பட்டிருந்தது. இதோ நம்ம main building entrance, அட இதோ நம்ம co-ops பக்கத்தில இருக்கும் மரப் படிக்கட்டு, இது நம்ம maths departmentஆ என்று ஒரே கூத்து தான். அதன் பின் பல பழைய (80s or 90s) படங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தைப் பார்த்து விட்டேன். அப்போதெல்லாம் court scene எடுப்பது எல்லாம் அங்குதான் போலும். உதாரணத்திற்கு நாயகன் படத்தின் இறுதிக் காட்சி.. அதில் காட்டப்படும் கோர்ட் அண்ணா பல்கலைக்கழக கட்டிடம் தான். ஆசை திரைப்படத்தில் சில காட்சிகள் கூட அங்கு எடுக்கப்பட்டது என்று கேள்வி. நல்லவேளையாக எனக்குத் தெரிந்தவரை சமீபத்தில் அங்கு திரைப்படங்கள் எடுக்கப்படுவதில்லை.

1 comment:

dondu(#11168674346665545885) said...

சமீபத்தில் 1963-ல் சிவாஜி சாவித்திரி நடித்த ”ரத்த திலகம்” என்னும் படம் பார்த்தேன். டைட்டில்ஸில் காட்டப்படுவது அன்றைய கிண்டி பொறியியல் கல்லூரி (தற்போதைய அண்ணா பல்கலைக்கழகம்).

அன்புடன்,
டோண்டு ராகவன்