12/18/07

கல்லூரி நினைவுகள் - GK

இன்று காலை வண்டியில் வந்துகொண்டிருந்த பொழுது என்னையும் அறியாமல் பாடிய பாட்டு - " உனக்கென்ன மேலே நின்றாய்". என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் ஒன்று. ஆனால் இன்று இதைப் பாடும்போது நினைவிற்கு வந்தவன் GK என்ற G Karthikeyan - என்னுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தவன். எங்கள் கல்லூரியில் ஒரு விழாவில் இந்த பாடலுக்கு நடனம் ஆடினான். எங்கள் அனைவர் கண் முன்பும் சிம்லா ஸ்பெஷல் கமலை கொண்டுவந்து நிறுத்தியது அவனது நடனம்.

நடனம் என்றவுடன் Backstreet Boys உம் Michael Jacksonஉம் ஆடிய காலம் அது (இப்பொழுது எப்படி என்று தெரியவில்லை). அந்த குறுகிய வட்டத்திலிருந்து விலகி தனக்கென்று ஒரு பாணியை வைத்து ஆடினான் GK. அவன் முதன் முதல் கல்லூரியில் மேடை ஏறி ஆடியது ஒரு சந்திரபாபு பாடலுக்கு. சந்திரபாபுவின் பாணியை அப்படியே கையாண்டு ஆடுவது எளிதல்ல. அதை அழகாகக் கையாண்டு ஆடியது இன்றும் நினைவில் இருக்கிறது (Fresher's party??). இது எங்கள் துறைக்குள் நடந்த விழா. கல்லூரியே பார்க்க அவன் "என்னுயிரே" (உயிரே) பாடலுக்கு ஆடினான். ஆடிய அனைவருள்ளும் தமிழ் பாடலுக்கு ஆடியது இவன் ஒருவனே என்றால் பாருங்கள். முடிவை அறிவித்த நடுவர் இவனது நடனத்தை தனியாக புகழ்ந்தார் - எனினும் முதல் பரிசை இவனுக்குக் கொடுக்காமல் அநியாயம் செய்தனர். இருந்தபோதும் ஒவ்வொரு விழாவிலும் இவனது வித்தியாசமான நடனத்தைக் காண அவனுக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் (அடியேனையும் சேர்த்து தான்).

இப்பொழுது எங்கு இருக்கிறான் என்று தெடியவில்லை. மேற்படிப்பு படிக்கும் போதும் அவனும், எங்களது இன்னொரு நண்பன் கார்த்திக்கும் சேர்ந்து நடனம் ஆடியது வரை தெரியும். அவனது திருமணத்திற்க்கும் செல்ல முடியவில்லை...

கல்லூரி நினைவுகளில் மூழ்கி நிற்கும்
-மகேஷ்

3 comments:

SA Narayanan said...

நீ குறிப்பிட்டுள்ள எந்தப் பாட்டுமே எனக்குத் தெரியாது; நீ ரசித்துள்ளபடியால், அந்தப் பாட்டுக்கள் நன்றாகத்தான் இருந்திருக்கும், சந்தேகமில்லை.

சந்திரபாபு பாடிய ஏறத்தாழ எல்லாப் பாடல்களுமே எனக்குப் பிடித்தவை. சந்திரபாபுவின் விசிறி நான்!

Unknown said...

உனக்கென்ன மேலே நின்றாய் கேட்கவில்லை என்றால் வியப்பாக உள்ளது. கேட்க மற்றும் பார்க்க - http://www.youtube.com/watch?v=LUmB1_afdcc

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

magesh anna,
the other karthik u mean is me? s.karthikeyan? if it's so i am happy u remember me. and do u remember me dancing for 'chinna mazhaith thulikal '.happy days.hm